• Tue. Dec 31st, 2024

24×7 Live News

Apdin News

சீனா vs இந்தியா: திபெத்தில் உலகின் மிகப்பெரிய அணை – இந்தியாவுக்கு என்ன பாதிப்பு?

Byadmin

Dec 29, 2024


சீனா: திபெத்தில் உலகின் மிகப்பெரிய அணையை கட்ட திட்டம் - இந்தியாவுக்கு என்ன பாதிப்பு?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, யார்லுங் சாங்போ ஆற்றில் இந்த அணை அமைக்கப்பட இருக்கிறது.

  • எழுதியவர், கேவின் பட்லர்
  • பதவி, பிபிசி நியூஸ்

உலகின் மிகப்பெரிய நீர்மின் அணையை கட்ட சீனா ஒப்புதல் அளித்துள்ளது. இது திபெத்தின் பகுதிகளில் உள்ள மக்கள் அங்கிருந்து இடம்பெயர்ந்து செல்வது குறித்தக் கவலைகளை அதிகரித்துள்ளது.

அதேவேளையில் இந்த அணை, இந்தியா மற்றும் வங்கதேசத்தில் பாயும் ஆற்றின் நீரோட்டத்தில் ஏற்படுத்தும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்த கவலைகளும் அதிகரித்துள்ளன.

யார்லுங் சாங்போ ஆற்றில் கீழ் பகுதியில் இந்த அணை அமைக்கப்பட இருக்கிறது. தற்போது உலகின் மிகப்பெரிய நீர்மின் நிலையமான, த்ரீ கார்ஜஸ் அணையைவிட இந்த அணை மூன்று மடங்கு அதிக ஆற்றலை உருவாக்கக்கூடும்.

“இந்த அணைத்திட்டம் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் அதைச் சுற்றியுள்ள பகுதிகளின் செழுமை மேம்படும். சீனாவின் காலநிலை இலக்குகளை அடைய வழிவகுக்கும்,” என்று சீன அரசு ஊடகம் இந்தத் திட்டம் குறித்து விவரித்துள்ளது.

By admin