• Sun. Feb 23rd, 2025

24×7 Live News

Apdin News

சீமான் கைது ஆவாரா? நடிகை வழக்கின் அடுத்தக்கட்டம் என்ன? நாம் தமிழர் கட்சி குற்றச்சாட்டுக்கு திமுக பதில்

Byadmin

Feb 23, 2025


சீமான் மீதான பாலியல் புகார்: 15 சாட்சிகள், 12 வார அவகாசம் - வழக்கின் அடுத்த கட்டம் என்ன?

பட மூலாதாரம், NAAM TAMILAR KATCHI

  • எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
  • பதவி, பிபிசி தமிழ்

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிரான நடிகையின் புகார் தீவிரமானது என்பதால் அதை ரத்து செய்ய முடியாது என்று திங்கள் கிழமையன்று (பிப்ரவரி 17) சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதோடு, 12 வாரங்களில் இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்யுமாறு காவல்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

“சீமான் மீது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கையை விசாரணை அதிகாரியே முடிவு செய்வார்” என்று கூறுகிறார் அரசு வழக்கறிஞர்.

ஆனால், சீமானுக்கு கெட்டப் பெயரை ஏற்படுத்தும் திட்டத்துடன் மாநில அரசு செயல்படுவதாக நாம் தமிழர் கட்சி குற்றம் சுமத்துகிறது.

சீமானுக்கு எதிரான நடிகையின் புகார் என்ன ஆகும்? உத்தரவில் நீதிபதி சொன்னது என்ன?

By admin