• Tue. Jan 20th, 2026

24×7 Live News

Apdin News

சீர்காழி கோவிந்தராஜன் பாடிய மறக்க முடியாத 10 பக்தி, சினிமா பாடல்கள்

Byadmin

Jan 19, 2026


சீர்காழி கோவிந்தராஜன், சீர்காழி சிவசிதம்பரம்

பட மூலாதாரம், Sivachidambaram

படக்குறிப்பு, சீர்காழி சிவசிதம்பரம்

இன்றைக்கும் அதிகாலையில் கோவில்களில், வீடுகளில், தேநீர் கடைகளில், வாகனங்களில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது சீர்காழி எஸ்.கோவிந்தராஜன் குரல். ஆன்மிக பாடல் மட்டுமல்ல, சினிமா பாடல், தனியிசை பாடல்கள் என ஆயிரக்கணக்கான பாடல்களை பாடிய கோவிந்தராஜன் தனது 55வது வயதில் காலமானார்.

பாடகராக, நடிகராக, இசையமைப்பாளராக விளங்கிய கோவிந்தராஜனுக்கு இன்று 93வது பிறந்தநாள். அவரின் நினைவலைகள் குறித்தும் சிறந்த பாடல்கள் குறித்தும் அவரின் மகனான சீர்காழி கோ.சிவசிதம்பரம் பிபிசி தமிழிடம் பகிர்ந்து கொண்டார்.

பிபிசிக்காக பாடிய பாடல்

”அப்பாவுக்கும் பிபிசிக்கும் அந்த காலம் தொட்ட நெருங்கிய தொடர்பு உண்டு” என்று கூறுகிறார் சிவசிதம்பரம்.

“பிபிசி தமிழோசையிலும் சீர்காழி கோவிந்தராஜின் குரல் ஒலித்தது. தேம்ஸ் நதிக்கரையில் இருந்து தேடி வரும் ஓசை. தேன் தமிழில் பல சேதிபாடி வரும் ஓசை, எங்கள் தமிழோசை’ என்ற பாடலை பாடிக்கொடுத்தார்.” என்றார்.

தனது தந்தை பாடிய ஆன்மிக மற்றும் சினிமா பாடல்களில் மிகவும் பிடித்த பத்து பாடல்களை பட்டியலிட்டார் சிவசிதம்பரம்.

By admin