• Thu. Aug 14th, 2025

24×7 Live News

Apdin News

சுதந்திர தின தொடர் விடுமுறை: 2,449 சிறப்பு பேருந்துகள் இயக்க போக்குவரத்து துறை ஏற்பாடு | Transport Department arranges to operate 2,449 special buses Independence Day holidays

Byadmin

Aug 13, 2025


சென்னை: சுதந்திர தின தொடர் விடு முறையை முன்னிட்டு, 2,449 சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆர்.மோகன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஆக.15-ம் தேதி சுதந்திர தினம் மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு, ஆக.13, 14, 15-ம் தேதி களில் சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 1,320 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படும்.

கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு ஆக.14, 15-ம் தேதிகளில் 190 பேருந்துகளும், மாதவரத்திலிருந்து 24 சிறப்பு பேருந் துகளும் இயக்கப்படுகின்றன. இதேபோல், பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்து பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்பு பேருந்துகளும், ஆக.17-ம் தேதி ஊர் திரும்ப வசதியாக 715 பேருந்துகள் என மொத்தமாக 2,449 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

கண்காணிப்பு அலுவலர்கள்: சிறப்பு பேருந்து இயக்கத் தைக் கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர். வார இறுதியில் பேருந்து களில் பயணிக்க 67 ஆயிரத்துக் கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



By admin