• Wed. Jan 28th, 2026

24×7 Live News

Apdin News

சுனிதா வில்லியம்ஸ் சில நாள் பயணம் 9 மாதமாக நீண்டது பற்றி கூறியது என்ன? பிபிசிக்கு சிறப்புப் பேட்டி

Byadmin

Jan 28, 2026


சுனிதா வில்லியம்ஸ், இந்திய பயணம், நாசாவில் இருந்து ஓய்வு, விண்வெளிப் பயணம்
படக்குறிப்பு, சுனிதா வில்லியம்ஸ் (கோப்புப் படம்)

“வானத்தில் இருந்து கீழே பூமியைப் பார்க்கும்போது, வாக்குவாதங்களும் சண்டைகளும் மிகவும் அற்பமாகத் தெரிகின்றன.”

நாசா விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்.

சுமார் 30 ஆண்டு பணிக்காலத்தில், விண்வெளியில் இருந்து அவர் பார்த்த காட்சி, அவரது மனதில் நீங்காத தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதுமட்டுமின்றி, மனிதகுலம், தொழில்நுட்பம், தாயகம் ஆகியவற்றை அவர் பார்க்கும் விதத்தையும் அந்தக் கண்ணோட்டம் இன்றும் வடிவமைத்து வருகிறது.

சுனிதா வில்லியம்ஸ் கடந்த டிசம்பர் மாதம் நாசாவில் இருந்து ஓய்வு பெற்றார். அவர், சமீபத்தில் கேரளாவின் கோழிக்கோட்டில் நடந்து முடிந்த கேரள இலக்கிய விழாவில் கலந்து கொள்வதற்காக இந்தியா வந்திருந்தார்.

By admin