சுனிதா வில்லியம்ஸ் பயணித்த விண்கலன் பூமிக்கு வர 17 மணிநேரம் ஆனது ஏன்? – ரஷ்யாவின் சோயுஸ் சில மணி நேரத்தில் வந்தது எப்படி?
சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஒன்பது மாதங்களைக் கழித்த அமெரிக்க விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் பத்திரமாக பூமிக்குத் திரும்பியுள்ளனர்.
அமெரிக்காவின் தனியார் விண்வெளி நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ்-இன் டிராகன் விண்கலத்தில் மொத்தம் 17 மணிநேரம் அவர்கள் பயணம் செய்துள்ளனர்.
ஆனால், ரஷ்யாவின் ‘சோயுஸ்’ விண்கலனால், அதே சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து விண்வெளி வீரர்களை ஏற்றிக் கொண்டு மூன்று மணிநேரத்தில் பூமிக்கு வந்தடைய முடியும்.
ஒரே இடத்திலிருந்து புறப்படும் இரண்டு விண்கலன்களுக்கு இடையே பயண நேரத்தில் ஏன் 14 மணி நேர வித்தியாசம் உள்ளது?
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு