• Wed. Mar 19th, 2025

24×7 Live News

Apdin News

சுனிதா வில்லியம்ஸ்: போயிங் ஸ்டார்லைனரில் சென்றது முதல் ஸ்பேஸ்எக்ஸ் டிராகனில் திரும்பியது வரை என்ன நடந்தது? முழு விவரம்

Byadmin

Mar 19, 2025


சுனிதா வில்லியம்ஸ், ஸ்பேஸ்எக்ஸ் டிராகன், நாசா

பட மூலாதாரம், Getty Images

சர்வதேச விண்வெளி நிலையத்தில் கடந்த 286 நாட்ளாக தங்கியிருந்த சுனிதா வில்லியம்ஸ், பத்திரமாக பூமிக்குத் திரும்பியுள்ளா. இந்திய நேரப்படி சுமார் 3.30 மணிக்கு அவர் பயணித்த ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் விண்கலம், புளோரிடா மாகாணத்திற்கு அருகில், கடலில் இறங்கி, மிதந்தது.

புட்ச் வில்மோர் மற்றும் சர்வதேச விண்வெளி நிலையத்தின் சக பணியாளர்களான அமெரிக்க விண்வெளி வீரர் நிக் ஹேக், ரஷ்ய விண்வெளி வீரர் அலெக்சாண்டர் கோர்புனோவ் ஆகியோருடன் இந்திய நேரப்படி நேற்று காலை 10.35 மணிக்கு, சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து புறப்பட்ட சுனிதா வில்லியம்ஸ், 17 மணிநேர பயணத்திற்குப் பிறகு பூமியை அடைந்தார்.

காணொளிக் குறிப்பு, சுனிதா வில்லியம்ஸ் வந்த விண்கலம் பத்திரமாக கடலில் விழுந்த காட்சி

சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் உள்ளிட்டோரை நாசா மீட்புக் குழுவினர் விண்கலத்திலிருந்து வெளியே அழைத்து வந்தனர்.

இவர்கள் ஸ்டிரெக்சர்கள் மூலம் அழைத்துச் செல்லப்படும் வீடியோ காட்சியையும் நாசா வெளியிட்டுள்ளது. விண்கலத்தில் இருந்து வெளியே வந்த சுனிதா வில்லியம்ஸ் சிரித்தபடி கையை அசைத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.



By admin