• Fri. Nov 15th, 2024

24×7 Live News

Apdin News

சுனிதா வில்லியம்ஸ்: விண்வெளியில் ஆரோக்கியமாக வாழ்வது எப்படி? குளிப்பது, துணி துவைப்பது எப்படி?

Byadmin

Nov 14, 2024


சுனிதா வில்லியம்ஸ்: விண்வெளியில் உடல் மற்றும் மனநலனை விண்வெளி வீரர்கள் பேணுவது எப்படி?

பட மூலாதாரம், NASA

கடந்த ஆண்டு ஜூன் மாதம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் சென்ற விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் இருவரும் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 2025 வரையிலும் அங்கேயே இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

இந்நிலையில், கடந்த ஐந்து மாதங்களுக்கும் மேலாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருக்கும் சுனிதா வில்லியம்ஸின் உடல்நிலை குறித்துக் கவலைகள் எழுப்பப்பட்டன.

ஆனால், தனது உடல்நிலை குறித்துக் கவலைப்பட வேண்டியதில்லை எனவும், தனது தோற்றத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்திற்கு ‘திரவ மாற்றமே’ காரணம் எனவும் சுனிதா வில்லியம்ஸ் கடந்த செவ்வாயன்று கூறியுள்ளார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

கடந்த வாரம் நாசா வெளியிட்ட சுனிதா வில்லியம்ஸின் புகைப்படத்தில், அவரது முகம் சற்றுப் பெரிதாகவும், மெல்லிய உடலுடனும் தோன்றிய நிலையில், அவரது உடல்நிலை குறித்துக் கவலைகள் எழுப்பப்பட்டன.

By admin