• Mon. Mar 10th, 2025

24×7 Live News

Apdin News

சுனிதா வில்லியம்ஸ்: விண்வெளியில் புவி ஈர்ப்பு விசை இல்லாத சூழலில் அதிக நாள் தங்கினால் இதயம் வேகமாக முதுமை அடையுமா?

Byadmin

Mar 8, 2025


சுனிதா வில்லியம்ஸ், விண்வெளி பயணம், இதயம்

பட மூலாதாரம், Getty Images

  • எழுதியவர், சிராஜ்
  • பதவி, பிபிசி தமிழ்

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நாசா விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் 270 நாட்களுக்கும் மேலாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியுள்ளார். தற்போது அவர் பூமிக்கு எப்போது திரும்பி வரக்கூடும் என்று நாசா அறிவித்துள்ளது.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அவர்களை பூமிக்கு அழைத்து வரும் பணியை ஸ்பேஸ் எக்ஸ் உரிமையாளர் ஈலோன் மஸ்கிடம் ஒப்படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நாசாவின் கூற்றுப்படி, கிட்டத்தட்ட பத்து மாதங்களாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருக்கும் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் இருவரும், மார்ச் 19 அல்லது 20ஆம் தேதியில் பூமிக்குத் திரும்பலாம்.

‘எட்டு நாள் பயணமாகச் சென்றவர், 9 மாதங்களைக் கடந்தும் விண்வெளியில் சிக்கியுள்ளார்’ என செய்திகளில் இந்த விஷயம் பரபரப்பாகப் பேசப்பட்டாலும், ஒரு விண்வெளி வீரர், திட்டமிடப்பட்ட நாட்களைக் கடந்தும் விண்வெளியில் தங்கியிருப்பது இது முதல்முறையல்ல.

By admin