• Thu. Apr 2nd, 2026

24×7 Live News

Apdin News

‘சுமார் 10,000 பேர் வேலை இழந்திருக்கலாம்’ – ஆரக்கிள் நிறுவனத்தில் என்ன நடந்தது?

Byadmin

Apr 2, 2026


ஆரக்கிள் நிறுவனத்தின் இணை நிறுவனர் லாரி எலிசன்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, ஆரக்கிள் நிறுவனத்தின் இணை நிறுவனர் லாரி எலிசன் (படத்தில் இருப்பவர்) உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவராவார்.

தொழில்நுட்ப நிறுவனமான ஆரக்கிள் செவ்வாயன்று “குறிப்பிடத்தக்க” அளவில் ஆட்குறைப்புகளை மேற்கொண்டுள்ளது. அந்நிறுவனத்தின் மூத்த ஊழியர்கள் இணையத்தில் இது குறித்த தகவல்களை பதிவிட்டுள்ளனர்.

இந்த ஆட்குறைப்பால் பாதிக்கப்படாத மூத்த மேலாளரான மைக்கேல் ஷெப்பர்ட், “மூத்த பொறியாளர்கள், வடிவமைப்பாளர்கள், செயல்பாட்டுத் தலைவர்கள், திட்ட மேலாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள்” ஆகியோர் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக லிங்க்ட்இன் தளத்தில் எழுதியுள்ளார்.

ஆரக்கிள் நிறுவனத்திற்குள் செய்தி அனுப்பும் அமைப்பான ‘ஸ்லாக்’-இல் செயலில் உள்ள ஊழியர்களின் எண்ணிக்கை குறைந்திருப்பதை மேற்கோள் காட்டி, இதுவரை சுமார் 10,000 பேர் வேலை இழந்திருக்கலாம் என்று ஊழியர் ஒருவர் பிபிசி-யிடம் செவ்வாயன்று தெரிவித்தார்.

இது குறித்து பிபிசி நியூஸ் தொடர்பு கொண்டபோது, கருத்து தெரிவிக்க ஆரக்கிள் நிறுவனம் மறுத்துவிட்டது.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026, தொடர்பான செய்திகள், காணொளிகள், நேர்காணல்களை படிக்க, பார்க்க... 

https://www.bbc.com/tamil/topics/cx2r5pqvxy1t
படக்குறிப்பு, தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026, தொடர்பான செய்திகள், காணொளிகள், நேர்காணல்களை படிக்க, பார்க்க…

செயற்கை நுண்ணறிவு

இந்நிறுவனம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திற்காகப் பெருமளவில் செலவு செய்து வருகிறது. ஆனால் இந்த ஆட்குறைப்புகள் அந்த முதலீட்டுடன் தொடர்புடையதா என்பது தெரியவில்லை.

By admin