• Sun. Sep 21st, 2025

24×7 Live News

Apdin News

சுரண்டை அருகே குளத்தில் தண்ணீர் எடுக்கும் விவகாரம்: அதிமுக எம்எல்ஏ தலைமையில் பொதுமக்கள் சாலை மறியல் | Public road blockade led by ADMK MLA

Byadmin

Sep 21, 2025


தென்காசி: சுரண்டை அருகே குளத்​தில் இருந்து தண்​ணீர் எடுப்​பது தொடர்பான விவ​காரத்​தில், அதி​முக எம்​எல்ஏ தலை​மை​யில் சாலை மறியல் போராட்​டம் நடை​பெற்​றது. கிராமத்​தைச் சுற்றி 500-க்​கும் மேற்பட்ட போலீ​ஸார் குவிக்​கப்​பட்​டுள்​ள​தால் அப்​பகு​தி​யில் பதற்றம் நில​வு​கிறது.

தென்​காசி மாவட்​டம் சுரண்டை அரு​கே​யுள்ள கள்​ளம்​புளி குளத்​துக்கு கருப்​பாநதி அணை​யில் இருந்து தண்​ணீர் வரு​கிறது. இந்​தக் குளம் நிரம்​பிய பின்​னர், அரு​கில் உள்ள குலை​யனேரி குளத்​துக்கு தண்​ணீர் செல்​வது வழக்​கம். கள்​ளம்​புளி குளத்தை நம்பி 48 ஏக்​கர் நஞ்​சை, 500 ஏக்​கர்புஞ்சை நிலங்​கள் உள்​ளன.

இந்​நிலை​யில், கள்​ளம்​புளி குளத்​தில் இருந்து குலைநேரி குளத்​துக்கு தண்​ணீர் கொண்டு செல்​வதற்​காக தனி குழாய் பதிக்​கும் திட்​டம் சில நாட்​களுக்கு முன்தொடங்​கியது. இதற்கு எதிர்ப்பு தெரி​வித்து இப்​பகுதி மக்​கள் குளத்​துக்​குள் குடி​யிருக்​கும் போராட்​டத்தை 2 நாட்​களுக்கு முன்பு மேற்​கொண்​டனர். அவர்களுடன், அதி​காரி​கள் பேச்​சு​வார்த்தை நடத்​தினர்.

குழாய் பதிக்​கும் திட்​டத்தை முற்​றி​லு​மாக கைவிடு​மாறு பொது​மக்​கள் வலி​யுறுத்​தினர். இது தொடர்​பாக பேச்​சு​வார்த்தை நடத்த ஏற்​பாடு செய்​யப்​படும் என அதிகாரி​கள் தெரி​வித்​தனர். இதையடுத்​து, போராட்​டத்தை பொது​மக்​கள் கைவிட்​டனர்.

கடந்த 2 நாட்​களுக்கு முன்பு கடையநல்​லூர் வட்​டாட்​சி​யர் அலு​வல​கத்​தில், மாவட்ட வரு​வாய் அலு​வலர் ஜெயச்​சந்​திரன் தலை​மை​யில் நடை​பெற்ற பேச்​சு​வார்த்தை தோல்​வியடைந்​தது. நேற்று முன்​தினம் நள்​ளிர​வில் கள்​ளம்​புளி கிராமத்​தில் மின்​சா​ரம் துண்​டிக்​கப்​பட்​டு, கிராமத்தை சுற்​றி​லும் தடுப்பு வளை​யம் ஏற்​படுத்தப்​பட்​டது. சிறிய கிராமத்​தில் 1 ஏடிஎஸ்​பி, 2 டிஎஸ்​பிக்​கள், 5 ஆய்​வாளர்​கள் தலை​மை​யில் 500-க்​கும் மேற்​பட்ட போலீ​ஸார் குவிக்​கப்​பட்​டனர்.

நேற்று காலை பொதுப்​பணித்​துறை அதி​காரி​கள் மண் அள்​ளும்இயந்​திரத்​தின் மூலம் குழாய் பதிக்கும் பணியை தொடங்​கினர். இதற்கு எதிர்ப்பு தெரி​வித்து 500-க்கும் மேற்​பட்ட பொது​மக்​கள்இயந்​திரத்தை முற்​றுகை​யிட்​டு,கற்​களை வீசினர். இயந்​திரம் திருப்பி அனுப்பி வைக்​கப்​பட்டது. எனினும், குழாய் பதிக்​கும்திட்​டத்தை முற்​றி​லு​மாக கைவிடவலி​யுறுத்தி பொது​மக்​கள்குளத்​துக்​குள் அமர்ந்​தனர். கடையநல்​லூர் எம்​எல்ஏ கிருஷ்ண​முரளி (அதி​முக) போராட்​டம் நடத்​திய மக்​களுக்கு ஆதரவு தெரி​வித்​து,குளத்​துக்​குள் அமர்ந்து தர்​ணாப்போராட்​டத்​தில் ஈடு​பட்​டார். அங்​கேயே கிராம மக்​கள் சமையலைத் தொடங்​கினர். இதை அதி​காரி​கள் கண்​டு​கொள்​ள​வில்​லை.

இதையடுத்​து, கள்​ளம்​புளி – சேர்த்​தமரம் சாலை​யில் எம்​எல்ஏ தலை​மை​யில் மறியல் நடை​பெற்​றது. 2 மணி நேரத்​துக்கு மேலாக நடை​பெற்ற மறிய​லால் போக்​கு​வரத்து பாதிக்​கப்​பட்​டது. தகவலறிந்து வந்த வட்​டாட்​சி​யர் பாலசுப்​பிரமணி​யன் மற்​றும் அதி​காரி​கள், போராட்​டத்தில் ஈடுபட்​ட​வர்​களு​டன் பேச்​சு​வார்த்தைநடத்​தினர். இது தொடர்பானகருத்​துரு அரசுக்கு அனுப்பி வைக்​கப்​பட்டு தீர்வு எட்​டப்​படும் என உறுதி அளித்​ததை தொடர்ந்​து, போராட்​டத்​தில் ஈடு​பட்​ட​வர்​கள் கலைந்து சென்​றனர்.



By admin