5
சுவிட்சர்லாந்தின் பிரிபொங் மாகாணம், கெர்சர் நகரில் நேற்று மாலை நடந்து கொண்டிருந்த பஸ் திடீரென தீப்பற்றியது. அந்த பஸ்சில் 11 பேர் பயணித்து வந்தனர்.
தீ பஸ்சை முழுவதும் மூடியதால் பயணிகள் அதிர்ச்சியடைந்து வெளியேற முயன்றனர். இதில் 5 பேர் படுகாயங்களுடன் உயிர் தப்பினார்கள், ஆனால் 6 பயணிகள் பஸ்சில் உயிரிழந்தனர்.
தகவல் வந்ததும் தீயணைப்புத்துறை விரைந்து சென்று பஸ்சில் எரிந்த தீயை அணைத்தது. காயமடைந்த 5 பேரையும் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பினர்.
பொலிஸார், பஸ்சில் தீப்பற்றிய காரணத்தை மற்றும் சதிச்செயல் சம்பந்தமுள்ளதா என்பதை விசாரணை நடத்தி வருகின்றனர்.