7
இலங்கை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, உலக பொருளாதார மன்ற மாநாட்டில் பங்கேற்க சுவிட்சர்லாந்துக்கு சென்றுள்ளார். அங்கு அவர் உலக தலைவர்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் பல உயர்மட்ட இராஜதந்திர சந்திப்புகளில் கலந்துகொண்டு, பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
இதன் கீழ், அவர் ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மசாடோ கான்டாவை சந்தித்து, இலங்கையின் பொருளாதார மீட்பு திட்டங்கள் மற்றும் பேரிடருக்குப்பின் மீள் கட்டமைப்பு பணிகள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடினார்.
அத்துடன், சிங்கப்பூர் ஜனாதிபதி தர்மன் சண்முகரத்தினத்துடன் இரு தரப்பு கலந்துரையாடலில் ஈடுபட்டு, டிட்வா சூறாவளிக்கு பிறகு சிங்கப்பூர் வழங்கிய உதவிகளுக்கு நன்றிபுரிந்தார். இரு நாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் வழிகளையும் விவாதித்தனர்.
மேலும், Menzies Aviation நிறுவனத்தின் தலைவர் ஹசன் எல் ஹூரியுடன் சந்தித்து விமான போக்குவரத்து சேவைகள் மற்றும் வான்வழித் தொடர்புகளை மேம்படுத்தும் வாய்ப்புகள் குறித்து கவனம் செலுத்தினார்.
இக்கலந்துரையாடல்களில் தொழில் அமைச்சர் மற்றும் நிதி பிரதிவமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோவும் பங்கேற்றனர்.
இலங்கை பிரதமர் மேலும் சில சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகளுடனும் சந்திப்புகளை மேற்கொண்டு வருகிறார். எதிர்வரும் 23 அல்லது 24ஆம் திகதியளவில் அவர் நாடு திரும்புவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

