0
காலையிலோ, மாலையிலோ சீக்கிரமா செய்யக்கூடிய, உடம்புக்கும் நல்லதா இருக்கும் டிபன் வேணும்னா இந்த முட்டை–கீரை டிபன் சரியான தேர்வு. புரதம் நிறைந்த முட்டையும், சத்து மிகுந்த கீரையும் சேரும் போது டேஸ்டும் சூப்பர், உடல் எடைக் குறைப்புக்கும் ரொம்ப உதவும். குறைந்த எண்ணெயில் செய்யக்கூடிய இந்த டிபன், டயட் பண்ணுறவங்களுக்கும் பொருத்தமானது.
தேவையான பொருட்கள்:
முட்டை – 4
கீரை (முருங்கை கீரை / பசலை கீரை / அரைக்கீரை) – ஒரு கப் (நறுக்கியது)
வெங்காயம் – 1 (சிறிதாக நறுக்கியது)
பச்சை மிளகாய் – 1 (விருப்பப்படி)
மஞ்சள் தூள் – ¼ டீஸ்பூன்
மிளகு தூள் – ½ டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 1 டீஸ்பூன்
செய்முறை:
முதலில் கீரையை நன்றாக கழுவி, சிறிதாக நறுக்கி வையுங்கள்.
ஒரு பாத்திரத்தில் 4 முட்டைகளை உடைத்து நன்றாக அடிக்கவும்.
அதில் நறுக்கிய கீரை, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்க்கவும்.
மஞ்சள் தூள், மிளகு தூள், உப்பு சேர்த்து அனைத்தையும் நன்றாக கலக்கவும்.
ஒரு நான்ஸ்டிக் தவாவில் 1 டீஸ்பூன் எண்ணெய் சூடாக்கவும்.
கலவையை தவாவில் ஊற்றி, மிதமான தீயில் இருபுறமும் நன்றாக வெந்துவரும் வரை சுடவும்.
மென்மையான, வாசனைமிக்க முட்டை–கீரை டிபன் தயார்.
சாப்பிடும் முறை:
இதை அப்படியே டிபனாக சாப்பிடலாம்.
அல்லது முழு கோதுமை ரொட்டியுடன், சாலட் சேர்த்து சாப்பிட்டால் இன்னும் சத்தான உணவாகும்.
எடைக் குறைப்புக்கு இது ஏன் நல்லது?:
முட்டையில் அதிக புரதம் இருப்பதால் நீண்ட நேரம் பசி எடுக்காது.
கீரை நார்ச்சத்து அதிகம்; செரிமானம் சீராக இருக்கும்.
குறைந்த எண்ணெயில் செய்வதால் கலோரி குறைவு.
உடலுக்குத் தேவையான வைட்டமின்கள் கிடைக்கும்.