• Sat. Apr 12th, 2025

24×7 Live News

Apdin News

சூசன்: டிஎன்ஏ பரிசோதனையால் 70 ஆண்டுகளுக்குப் பின் உண்மை அறிந்த பெண் என்ன செய்தார்?

Byadmin

Apr 6, 2025


டி.என்.ஏ பரிசோதனை, என்.ஹெச்.எஸ். மருத்துவமனை, பிரிட்டன்

பட மூலாதாரம், Family handout

வீட்டிலிருந்தே பரிசோதிக்கப்படும் ‘கிட்’ (kit) மூலம் மேற்கொண்ட டி.என்.ஏ பரிசோதனை முடிவுகளை பார்த்த போது சூசனுக்கு பெரும் குழப்பம் ஏற்பட்டது.

70 வயதைக் கடந்துவிட்ட அவர் தன்னுடைய தாத்தா குறித்து அதிகம் அறிந்திருக்கவில்லை. வேறு ஏதேனும் வித்தியாசமான முடிவுகள் வருகிறதா என்பதை பார்க்க தனியார் பரிசோதனை ஒன்றை மேற்கொள்ளவும் அவர் பணம் செலுத்தியிருந்தார்.

“அந்த பரிசோதனையில் அயர்லாந்து வழித்தோன்றல்கள் அதிகம் இருந்ததை காண முடிந்தது, ஆனால், எனக்குத் தெரிந்த வரை அது தவறு,” என்கிறார் சூசன்.

“அதை அப்படியே புறந்தள்ளினேன், அதுகுறித்து நினைக்கவில்லை” என்கிறார் அவர்.

By admin