• Tue. Dec 30th, 2025

24×7 Live News

Apdin News

சூரஜ்: திருத்தணியில் தாக்கப்பட்ட ஒடிசா இளைஞர் மருத்துவமனையில் இருந்து தப்பிச் சென்றாரா? நடந்தது என்ன?

Byadmin

Dec 30, 2025


 திருத்தணி,  ஒடிஷா மாநில இளைஞர், இன்ஸ்டாகிராம், வன்முறை, சிறார்கள்
படக்குறிப்பு, ‘வடஇந்திய நபர் என்ற காரணத்துக்காக அவரை அடித்ததாகக் கூறுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை’ என வடக்கு மண்டல ஐ.ஜி அஸ்ரா கார்க் தெரிவித்துள்ளார்.

    • எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
    • பதவி, பிபிசி தமிழ்

“அந்த நான்கு பேரும் 17 வயதுக்குட்பட்ட சிறுவர்கள். யாரும் படிக்கச் செல்லவில்லை. வீட்டில் தாய் அல்லது தந்தை என யாரோ ஒருவர் இல்லாத சூழலில் வளர்கின்றனர். ஒருவரைத் தாக்கிவிட்டோம் என்ற உணர்வு கூட அவர்களிடம் இல்லை” என்கிறார், திருத்தணி காவல்நிலைய ஆய்வாளர் மதியரசன்.

திருத்தணி ரயில் நிலையம் அருகே ஒடிசா மாநில இளைஞர் ஒருவரை சில சிறுவர்கள், ஆயுதங்களால் தாக்கி ரீல்ஸ் பதிவிட்ட சம்பவம் குறித்து இவ்வாறு அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

கைதான சிறுவர்களை செங்கல்பட்டு கூர்நோக்கு இல்லத்தில் காவல்துறை அடைத்துள்ளது. ஒரு சிறுவனுக்கு சிறார் நீதிக்குழுமம் பிணை வழங்கியுள்ளதாக, காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

 திருத்தணி,  ஒடிஷா மாநில இளைஞர், இன்ஸ்டாகிராம், வன்முறை, சிறார்கள்

பட மூலாதாரம், Getty Images

இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ்

காவல்துறை அளித்த தகவலின்படி, திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ரயில் நிலையம் அருகே டிசம்பர் 27 ஆம் தேதியன்று இளைஞர் ஒருவர் ரத்த காயத்துடன் விழுந்து கிடப்பதாக அப்பகுதியைச் சேர்ந்த சிலர் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். பின்னர் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அரசு மருத்துவமனையில் இந்தி தெரிந்த மருத்துவர் ஒருவர் விசாரித்தபோது, தனது பெயர் சூரஜ் எனவும் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் எனவும் அவர் தெரிவித்துள்ளனர். தலைக்கு கலரிங் அடித்த சில சிறுவர்கள் தன்னை ஆயுதங்களால் தாக்கியதாகவும் அந்த நபர் தெரிவித்துள்ளார் என்கிறது காவல்துறை.

By admin