தமிழ் சினிமாவின் வசூல் சக்கரவர்த்தியாக திகழும் நடிகர் சூர்யா கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் தோன்றி நடித்திருக்கும் ‘கருப்பு’ எனும் திரைப்படத்தில் இடம் பெற்ற’ காட் மோட்’ எனும் முதல் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.
நடிகரும், இயக்குநருமான ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் உருவாகி வரும் ‘கருப்பு’ எனும் திரைப்படத்தில் சூர்யா, திரிஷா, இந்திரன்ஸ், நட்டி நட்ராஜ், மன்சூர் அலிகான், சுவாசிகா, ஷிவதா, அனகா மாயா ரவி, சுப்ரீத் ரெட்டி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜி. கே. விஷ்ணு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்திருக்கிறார். கொமர்சல் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் எஸ். ஆர். பிரகாஷ் பாபு – எஸ். ஆர். பிரபு ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
அடுத்த ஆண்டில் வெளியிட திட்டமிடப்பட்டு வரும் இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற’ சரவெடி ஆயிரம் பத்தணுமா… சுருட்டு ஒரு லாரிய கொட்டணுமா.. ‘எனத் தொடங்கும் முதல் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த பாடலை பாடலாசிரியர் விஷ்ணு எடவன் எழுத, இசையமைப்பாளரும் , பின்னணி பாடகருமான சாய் அபயங்கர் மற்றும் பின்னணி பாடகர் கானா முத்து ஆகியோர் இணைந்து பாடியிருக்கிறார்கள். துள்ளல் இசை பாணியிலான இந்தப் பாடல் சூர்யாவின் ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்திருக்கிறது. இதன் காரணமாக இந்த பாடல் வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் எட்டு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது.
The post சூர்யாவின் ‘கருப்பு’ படத்தின் முதல் பாடல் வெளியீடு appeared first on Vanakkam London.