• Wed. Oct 23rd, 2024

24×7 Live News

Apdin News

சூர்யா நடிக்கும் ‘கங்குவா’ படத்தின் பாடல் வெளியீடு

Byadmin

Oct 22, 2024


பான் இந்திய நட்சத்திரமாக உயர்வதற்கு கடுமையாக முயற்சி செய்து வரும் நடிகர் சூர்யா முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘கங்குவா’ எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ யோ லோ’ எனும் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர் சிவா இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘கங்குவா ‘ எனும் திரைப்படத்தில் சூர்யா, திஷா படானி, பாபி தியோல், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். வெற்றி பழனிச்சாமி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு’ ராக்ஸ்டார் ‘ தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கிறார்.

பிரம்மாண்டமான ஃபேண்டஸி எக்ஷன் என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் யு வி கிரியேசன்ஸ் ஆகிய நிறுவனங்களில் சார்பில் தயாரிப்பாளர்கள் கே. ஈ. ஞானவேல் ராஜா- வம்சி -பிரமோத் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகைகளில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகும் இந்த ‘கங்குவா’ எனும் திரைப்படத்தில் இடம் பெற்ற ‘ஹோல்ட் மீ.. ஹக் மீ.. கிஸ் மீ..’  எனத் தொடங்கும் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.

இந்த பாடலை பாடலாசிரியர் விவேகா எழுத, பின்னணி பாடகரும், இசையமைப்பாளருமான தேவி ஸ்ரீ பிரசாத் மற்றும் லாபிதோ லோபோ ஆகியோர் இணைந்து பாடியிருக்கிறார்கள்.

இந்தப் பாடல் ராக்ஸ்டார் தேவி ஸ்ரீ பிரசாத்தின் பிரத்யேக துள்ளலிசை  மெட்டுடன்  ஆங்கிலமும், தமிழும் கலந்த தங்கிலீஷ் வார்த்தைகளுடன் வெளியாகி இளம் தலைமுறை மற்றும் இணைய தலைமுறை ரசிகர்களை கவர்ந்திருக்கிறது.

இந்தப் பாடல் வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் நான்கு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்திருக்கிறது.

The post சூர்யா நடிக்கும் ‘கங்குவா’ படத்தின் பாடல் வெளியீடு appeared first on Vanakkam London.

By admin