• Tue. Dec 9th, 2025

24×7 Live News

Apdin News

சூர்யா நடிக்கும் ‘சூர்யா 47 ‘ படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

Byadmin

Dec 9, 2025


சூர்யா நடிப்பில் தயாராகும் பெயரிடப்படாத அவருடைய 47 வது படத்தின் படப்பிடிப்பு மற்றும் பூஜை சென்னையில் சிறப்பாக தொடங்கியது.

மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத புதிய திரைப்படத்தில் சூர்யா, நஸ்ரியா நசீம் , நஸ்லென், ஆனந்தராஜ், ஜான் விஜய் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

வினித் உன்னி பாலோட் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு சுஷின் ஷியாம் இசையமைக்கிறார். இந்த திரைப்படத்தை ழகரம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இதன் தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் படக் குழுவினருடன் தயாரிப்பாளர்கள் ராஜசேகர் பாண்டியன் – எஸ். ஆர். பிரகாஷ்- எஸ். ஆர். பிரபு –  ஜோதிகா சூர்யா – நடிகர் கார்த்தி ஆகியோர் சிறப்பு அதிதிகளாக பங்கு பற்றி படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பும் தொடங்கியது.‌

இதனிடையே கடந்த சில ஆண்டுகளாக வணிக ரீதியிலான வெற்றி படத்தை வழங்காததால் நட்சத்திர அந்தஸ்தை பறி கொடுக்கும் நிலையில் இருக்கும் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ‘கருப்பு’ எனும் திரைப்படம் -அடுத்த ஆண்டில் அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த திரைப்படம் வெளியாகி விமர்சன ரீதியிலும் வணிக ரீதியிலும் பாரிய வெற்றியை பெற்ற பிறகுதான் அவர் நடிப்பில் தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகும் திரைப்படத்தினை பற்றிய புதிய தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

By admin