• Sun. May 25th, 2025

24×7 Live News

Apdin News

செங்கல்பட்டு – கடற்கரை மின்சார ரயில் சேவையில் இன்று மாற்றம் | Railway Engineering Works; Chengalpattu – Coastal Electric Train Service Change

Byadmin

May 25, 2025


கடற்கரை – செங்கல்பட்டு இடையே மின்சார ரயில் சேவையில் இன்று (மே 25) மாற்றம் செய்யப்பட உள்ளது.

சென்னை எழும்பூர் – விழுப்புரம் மார்க்கத்தில் செங்கல்பட்டு – சிங்கபெருமாள் கோவில் இடையே பொறியியல் பணி நடைபெறவுள்ளதால், மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட உள்ளது. அதன்படி, சென்னை கடற்கரை – செங்கல்பட்டுக்கு இன்று (மே 25) நண்பகல் 12.30 மணிக்கு இயக்கப் படும் மின்சார ரயில், சிங்கபெருமாள் கோவில் – செங்கல்பட்டு இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது.

செங்கல்பட்டு – சென்னை கடற்கரைக்கு இன்று மதியம் 1.50 மணிக்கு புறப்பட வேண்டிய மின்சார ரயில், செங்கல்பட்டு – சிங்கபெருமாள் கோவில் இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது. இத்தகவல் சென்னை ரயில்வே கோட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



By admin