• Sat. Nov 8th, 2025

24×7 Live News

Apdin News

செங்கோட்டையன் விவகாரத்திலும் திமுக பின்னணியில் இருக்குமோ என்ற சந்தேகம் உள்ளது: நயினார் நாகேந்திரன் கருத்து | Nainar Nagendran says there is a suspicion that dmk is behind the sengottaiyan affair as well

Byadmin

Nov 8, 2025


திருப்பூர்: செங்​கோட்​டையன் விவ​காரத்​தி​லும் திமுக பின்​னணி​யில் இருக்​குமோ என்ற சந்​தேகம் உள்​ளது என்று பாஜக மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் கூறி​னார். திருப்​பூர் மாவட்​டம் காங்​க​யம் அருகே தொட்​டி​பாளை​யம் பகு​தி​யில் உள்ள தனி​யார் பள்​ளி​யில் ‘வந்தே மாதரம்’ 150-வது ஆண்டு தின நிகழ்ச்சி நேற்று நடை​பெற்​றது.

இதில் பங்​கேற்ற நயி​னார் நாகேந்​திரன், பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: பாஜக கூறிய பிறகே, அதி​முகவை ஒருங்கிணைப்​பது தொடர்​பாக பல்​வேறு விஷ​யங்​களை தான் முன்​னெடுத்​த​தாக செங்​கோட்​டையன் கூறியுள்ளார். மேலும், 6 பேர் அதி​முகவை ஒன்​றிணைக்​கச் சென்​றோம் என்​றும் தெரி​வித்​துள்​ளார்.

அந்த 6 போ் யார் என்று தெரிய​வில்​லை. பாஜக​வில் யாரிடம் சென்று கூறி​னார்​கள் என்​ப​தை​யும் செங்​கோட்​டையன் கூற​வில்​லை. எனவே, இதுகுறித்து நான் கருத்து கூறி​னால் தவறாகப் போய்​விடும். ஏற்​கெனவே மனோஜ் பாண்​டியன் திமுக​வில் இணைந்​துள்​ளார். எனவே, செங்​கோட்​டையன் விவ​காரத்​தின் பின்​னணி​யிலும் திமுக இருக்​குமோ என்ற சந்​தேகம் உள்​ளது.

கோவை இளம்​பெண் கூட்டு பாலியல் வன்​கொடுமை சம்​பவத்​தில் சம்​பந்​தப்​பட்​ட​வர்​கள் மீது காவல் துறை​யும், அரசும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்​டும்.

யாராவது நம்​பு​வாவர்​களா? – பாஜக பெரிய கட்​சி. ஆனால், நடிகர் விஜய் இன்​னும் கவுன்​சிலர்​கூட ஆகவில்​லை. கட்சி தொடங்​கிய உடனேயே எங்​களுக்​கும், திமுக​வுக்​கும்​தான் போட்டி என கூறுகிறார். இதை யாராவது நம்​பு​வாவர்​களா? இவ்​வாறு அவர் தெரிவித்தா​ர்​.



By admin