• Sun. Nov 24th, 2024

24×7 Live News

Apdin News

செங்கோட்டை, நாகர்கோவில் ரயில்களில் கூடுதலாக 6 பெட்டிகள் இணைக்க முடிவு | Decision to add 6 additional coaches to Sengottai and Nagercoil trains

Byadmin

Nov 24, 2024


சென்னை: தாம்பரத்தில் இருந்து செங்கோட்டை மற்றும் நாகர்கோவிலுக்கு இயக்கப்படும் 2 விரைவு ரயில்களில் தற்காலிகமாக தலா 6 பெட்டிகள் கூடுதலாக இணைக்கப்பட உள்ளன. இதன்மூலம், இந்த ரயில்களின் பெட்டிகள் எண்ணிக்கை 17-ல் இருந்து 23-ஆக அதிகரிக்கிறது. தாம்பரத்தில் இருந்து செங்கோட்டை, நாகர்கோவிலுக்கு இயக்கப்படும் இரண்டு ரயில்களில் பயணிகளின் தேவைகள் அதிகரித்து வருகின்றன. இந்த ரயில்களில் கூடுதல் பெட்டிகள் சேர்க்க பயணிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதற்கிடையில், இந்த இரண்டு ரயில்களின் பெட்டிகள் 17-ல் இருந்து 23 ஆக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு: தாம்பரம் – செங்கோட்டைக்கு இயக்கப்படும் சிலம்பு விரைவு ரயிலில் (20681) ஒரு ஏசி இரண்டு அடுக்கு பெட்டி, மூன்றடுக்கு ஏசி பெட்டி 2, இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டி 2, பொதுப் பெட்டி ஒன்று என ஆறு பெட்டிகள் கூடுதலாக தற்காலிமாக சேர்க்கப்பட உள்ளன. இந்த ரயிலில் இந்த பெட்டிகள் சேர்ப்பு நவ.27-ம் தேதி முதல் ஜன.29-ம் தேதி வரை அமலில் இருக்கும். மறுமார்க்கமாக இயக்கப்படும் ரயிலில் (20682) இந்த கூடுதல் பெட்டிகள் சேர்ப்பு நவ.28-ம் தேதி முதல் ஜன.30-ம் தேதி வரை அமலில் இருக்கும்.

இதுபோல, தாம்பரம் – நாகர்கோவில் சந்திப்புக்கு இயக்கப்படும் விரைவு ரயிலில் (22657) ஒரு ஏசி இரண்டு அடுக்கு பெட்டி, மூன்றடுக்கு ஏசி பெட்டி 2, இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டி 2, பொதுப் பெட்டி ஒன்று என 6 பெட்டிகள் கூடுதலாக தற்காலிமாக சேர்க்கப்பட உள்ளன. தாம்பரம் – நாகர்கோவிலுக்கு இயக்கப்படும் ரயிலில் நவ.27-ம் தேதி முதல் ஜனவரி 29-ம் தேதி வரையும், மறுமார்க்கமாக, நாகர்கோவில் -தாம்பரத்துக்கு இயக்கப்படும் விரைவு ரயிலில் நவ.28-ம் தேதி முதல் ஜன.30-ம் தேதி வரை இது அமலில் இருக்கும். இந்த பெட்டிகள் சேர்ப்பு தற்காலிமாக நடைமுறையில் இருக்கும். அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.



By admin