• Fri. Aug 15th, 2025

24×7 Live News

Apdin News

செஞ்சோலை வளாகத்தில் உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி (படங்கள் இணைப்பு)

Byadmin

Aug 15, 2025


செஞ்சோலை வளாகத்தில் ஸ்ரீலங்கா இராணுவ விமானப் படையின் வான் தாக்குதலில் உயிரிழந்த மாணவர்களின் நினைவேந்தல் நிகழ்வு இன்று நடைபெற்றது.

முல்லைத்தீவு – வள்ளிபுனம், இடைக்கட்டுப் பகுதியில் அமைந்துள்ள செஞ்சோலை வளாகத்தில் பயிற்சிக்காகச் சென்றிருந்த மாணவர்கள் மீது இலங்கை விமானப் படை நடத்திய தாக்குதலில் உயிரிழந்த பாடசாலை மாணவிகள் 54 பேர் மற்றும் பணியாளர்கள் 7 பேரினதும் 19 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு வான் தாக்குதல் இடம்பெற்ற இடத்தில் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.

கடந்த 2006.08.14 ஆம் திகதியன்று வள்ளிபுனம் – இடைக்கட்டு பகுதியில் உள்ள செஞ்சோலை வளாகத்தில் விமானத் தாக்குதல் இடம்பெற்ற நேரத்தில் இன்று இந்த நிகழ்வு உணர்வுபூர்வமாக நடைபெற்றது.

உயிரிழந்த உறவுகளுக்கு சுடரேற்றி, அக வணக்கம் செலுத்தி மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த அஞ்சலி நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் தவிசாளர் வே.கரிகாலன், புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் உறுப்பினர்களான சி.குகனேசன், க.தர்மலவன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் பீற்றர் இளஞ்செழியன், தாயக நினைவேந்தல் அமைப்பின் தலைவர் முல்லை ஈசன் மற்றும் இளைஞர்கள், பொதுமக்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு அஞ்சலியைச் செலுத்தினர்.

By admin