• Sun. Oct 18th, 2026

24×7 Live News

Apdin News

சென்னையில் கனமழை: பாரிமுனையில் 36 செ.மீ, வேளச்சேரியில் 2 செ.மீ மட்டுமே – எங்கெல்லாம் மழை எச்சரிக்கை?

Byadmin

Oct 18, 2026


சென்னையில் கனமழை: பாரிமுனையில் 36 செ.மீ, வேளச்சேரியில் 2 செ.மீ மட்டுமே - எங்கெல்லாம் மழை எச்சரிக்கை?

படக்குறிப்பு, கோப்புப் படம்
பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை (அக்டோபர் 17) முதல் பெய்த கனமழையால், நகரின் ஆறு இடங்களில் 20 சென்டி மீட்டருக்கும் அதிகமான மழை பதிவாகியுள்ளது.

அதிகபட்சமாக பாரிமுனையில் 36 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ள நிலையில், கத்திவாக்கம், மீனம்பாக்கம், சென்னை சென்ட்ரல், திருவொற்றியூர், எண்ணூர் ஆகிய பகுதிகளிலும் அதி கனமழை பெய்துள்ளது.

இதற்கிடையில், சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார மாவட்டங்களில் அடுத்தடுத்த நாட்களிலும் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சியின் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் வெளியிட்டுள்ள மழைப்பதிவு அறிக்கையின்படி, அக்டோபர் 17-ஆம் தேதி காலை 6 மணி முதல் அக்டோபர் 18ஆம் தேதி காலை 6 மணி வரையிலான 24 மணிநேரத்தில், நகரின் 65 மழைமானி நிலையங்களில் சராசரியாக 10.5 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

அதிகபட்சமாக பாரிமுனையில் (36 செ.மீ.) மழை பதிவாகியுள்ளது. அதற்கு அடுத்தபடியாக கத்திவாக்கத்தில் 34.4 செ.மீ., மீனம்பாக்கத்தில் 28.5 செ.மீ., சென்னை சென்ட்ரலில் 27.4 செ.மீ., திருவொற்றியூரில் 22.4 செ.மீ., எண்ணூரில் 21.5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. (இந்த 6 இடங்களில் 20 சென்டிமீட்டருக்கும் அதிகமான மழை பதிவாகியுள்ளது.)

By admin