• Wed. May 6th, 2026

24×7 Live News

Apdin News

சென்னையில் திமுக தோல்வி ஏன்? தவெகவின் வியூகம் எப்படி உதவியது?

Byadmin

May 6, 2026


சென்னை, திமுக, தமிழக வெற்றி கழகம், சட்டப்பேரவை தேர்தல் 2026

பட மூலாதாரம், @mkstalin/X

    • எழுதியவர்,
    • பதவி, பிபிசி தமிழ்
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

தமிழ்நாட்டின் 2026 சட்டப்பேரவை தேர்தலில், சென்னையில் உள்ள 16 சட்டப்பேரவைத் தொகுதிகளில், 14 தொகுதிகளில் தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற்றுள்ளது. திமுக 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

ஆனால், சென்னையைச் சுற்றியுள்ள மாவட்டங்களான செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரத்தில் ஒரு தொகுதியில் கூட திமுக வெற்றிபெறவில்லை.

கடந்த 2016 மற்றும் 2021 சட்டப்பேரவை தேர்தல்களுடன் ஒப்பிடுகையில் திமுகவுக்கு இது மிகப்பெரிய இழப்பு.

தமிழ்நாட்டின் தலைநகரில் இவ்வளவு பெரிய தோல்வியை திமுக சந்தித்தது ஏன்?

சென்னை, திமுக, தமிழக வெற்றி கழகம், சட்டப்பேரவை தேர்தல் 2026

பட மூலாதாரம், TVK

படக்குறிப்பு, சென்னை, தியாகராய நகர் தவெக வேட்பாளர் ஆனந்தை ஆதரித்து விஜய் பிரசாரம் மேற்கொண்டபோது

‘சென்னை- திமுகவின் கோட்டை’ என்ற பிம்பம் தகர்ந்துவிட்டதா?

சென்னையில் டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர், பெரம்பூர், கொளத்தூர், வில்லிவாக்கம், திரு.வி.க நகர், எழும்பூர், ராயபுரம், துறைமுகம், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கு, அண்ணா நகர், விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, தியாகராயநகர், மயிலாப்பூர், மற்றும் வேளச்சேரி என 16 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன.

By admin