• Tue. Sep 16th, 2025

24×7 Live News

Apdin News

சென்னையில் புகார்: தெருநாய்களுக்கு உணவு அளித்தால் என்ன தண்டனை? உச்ச நீதிமன்ற உத்தரவு முழு விவரம்

Byadmin

Sep 16, 2025


தெருநாய்களுக்கு உணவளித்தால் என்ன தண்டனை?

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
    • பதவி, பிபிசி தமிழ்

சென்னையில் தெருநாய்களுக்கு உணவளித்தது தொடர்பாக 2 பேர் மீது செப்டம்பர் 8-ஆம் தேதி கோட்டூர்புரம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

‘அரசால் அனுமதிக்கப்பட்ட இடங்களில் நாய்களுக்கு உணவளிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், இந்த உத்தரவு பல இடங்களில் மீறப்படுகிறது’ என்கிறார், காவல்துறையில் புகார் அளித்த முரளிதரன்.

‘அரசு இடத்தை ஒதுக்கும் வரை தெருநாய்களுக்கு உணவளிப்பதைத் தடுப்பது சிரமம்’ என, விலங்குகள் நல ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

தெருநாய்களுக்கு உணவளிப்பது தொடர்பான உச்ச நீதிமன்ற உத்தரவு என்ன? அனுமதிக்கப்பட்ட இடங்கள் தவிர வேறு இடங்களில் தெருநாய்களுக்கு உணவளித்தால் என்ன தண்டனை?

By admin