• Mon. Dec 30th, 2024

24×7 Live News

Apdin News

சென்னை அண்ணா பல்கலைக் கழக மாணவி வழக்கு: ஐகோர்ட் அறிவித்த சிறப்பு விசாரணைக்குழுவில் உள்ள 3 பேர் யார்?

Byadmin

Dec 29, 2024


சென்னை அண்ணா பல்கலைக் கழக மாணவி வழக்கு
படக்குறிப்பு, சென்னை அண்ணா பல்கலைக் கழகம் (கோப்புப் படம்)

சென்னை அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் நாளுக்கு நாள் பூதாகரமாகி வருகிறது. அரசியல் களத்திலும் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ள இந்த வழக்கை விசாரிக்க 3 பேர் கொண்ட சிறப்பு விசாரணைக் குழுவை சென்னை உயர் நீதிமன்றம் அமைத்துள்ளது.

இதுதொடர்பான வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்தில் என்ன நடந்தது? முதல் தகவல் அறிக்கை வெளியானது பற்றி தமிழ்நாடு அரசு அளித்த விளக்கம் என்ன? குற்றம்சாட்டப்பட்டுள்ள நபர் அரசியல் தலைவர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் வெளியாகி இருப்பது பற்றிய மனுதாரர் தரப்பு முறையீட்டிற்கு நீதிபதிகள் அளித்த பதில் என்ன? விரிவாகப் பார்க்கலாம்.

சென்னை அண்ணா பல்கலைக் கழக மாணவி வழக்கு, உயர் நீதிமன்றம்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு

சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி அதிமுக வழக்கறிஞர் வரலட்சுமி மற்றும் பாஜக வழக்கறிஞர் மோகன்தாஸ் ஆகியோர் பொதுநல வழக்கைத் தாக்கல் செய்தனர்.

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், லட்சுமி நாராயணன் அமர்வில் முறையிட்ட வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி, “இந்த வழக்கு விசாரணையை நீதிமன்றம் கண்காணிக்க வேண்டும்” என்றார்.

By admin