• Mon. Oct 7th, 2024

24×7 Live News

Apdin News

சென்னை: இந்திய விமானப்படை சாகசத்தை காண சென்றவர்களில் 4 பேர் உயிரிழப்பா? தமிழ்நாடு அரசு மறுப்பு

Byadmin

Oct 7, 2024


சென்னை, இந்திய விமானப்படை சாகசம்

பட மூலாதாரம், X/mkstalin

படக்குறிப்பு, சென்னை மெரினா கடற்கரை மற்றும் காமராஜர் சாலையில் திரண்டிருந்த மக்கள்

சென்னையில் ஞாயிற்றுக் கிழமையன்று நடைபெற்ற விமானக் காட்சியைப் பார்க்கவந்தவர்களில் குறைந்தது 4 பேர் வரை உயிரிழந்திருப்பதாக குற்றம்சாட்டப்படுகிறது. ஆனால், தமிழ்நாடு அரசு இதனை மறுத்துள்ளது.

கடும் போக்குவரத்து நெரில்

இந்திய விமானப்படையின் 92வது ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் விமானப் படையினரின் சாகச நிகழ்ச்சி இன்று (அக்டோபர் 6) நடைபெற்றது. சுமார் இரண்டு மணி நேரம் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியைப் பார்வையிட லட்சக்கணக்கானவர்கள் ஒரே நேரத்தில் சென்னை மெரினா கடற்கரையில் திரண்டனர்.

இந்த நிகழ்ச்சி பிற்பகல் ஒரு மணிக்கு முடிவுக்கு வந்தபோது, கடற்கரையில் குவிந்திருந்த மக்கள் ஒரே நேரத்தில் வெளியேற முயன்றதால், மெரினாவை நோக்கிச் செல்லும் சாலைகள் அனைத்திலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மெரினாவை ஒட்டியுள்ள காமராஜர் சாலைக்கு இணையாகச் செல்லும் அண்ணா சாலையிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சென்னை, இந்திய விமானப்படை சாகசம்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
சென்னை, இந்திய விமானப்படை சாகசம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மெரினாவை நோக்கிச் செல்லும் சாலைகள் அனைத்திலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

4 பேர் பலி, 200 பேர் மயக்கம் என தகவல்

இந்த நெரிசலில் சிக்கியும் வெயில் நீண்ட நேரம் நின்றதால் ஏற்பட்ட நீரிழப்பினாலும் சுமார் 200 பேர் வரை மயக்கமடைந்தனர். இவர்களில் 90க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். இதில் குறைந்தது நான்கு பேர் உயிரிழந்ததாக ஊடகச் செய்திகள் தெரிவித்தன.



By admin