• Sun. Apr 6th, 2025

24×7 Live News

Apdin News

சென்னை உணவு பாதுகாப்பு அதிகாரி சதீஷ்குமார் பணியிட மாற்றம் ஏன்? | Why Chennai Food Safety Officer Satish Kumar transferred?

Byadmin

Apr 5, 2025


சென்னை: சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அதிகாரி சதீஷ்குமார் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அதிகாரி சதீஷ்குமார் மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்ககத்துக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் வகித்து வந்த பொறுப்பை திருவள்ளூர் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி போஸ், கூடுதலாக கவனித்துக் கொள்வார் என உணவு பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

நடந்தது என்ன? – முன்னதாக, சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அதிகாரி சதீஷ்குமார், உணவு கூடங்களில் தொடர் ஆய்வு மேற்கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தார். அண்மையில் தர்பூசணி பழங்களில் ரசாயன ஊசி செலுத்தப்படுவதாக தெரிவித்திருந்தார். இதனால் தர்பூசணி விற்பனை பாதிப்படைந்ததாக விவசாயிகள் குற்றம்சாட்டியிருந்தனர்.

இதற்கிடையே, கடந்த 3-ம் தேதி அண்ணா சாலையில் உள்ள ஓட்டலை சோதனையிட வந்த சதீஷ்குமார் தலைமையிலான குழுவினர், திடீரென திரும்பிச் சென்றனர். மேலிட அழுத்தம் காரணமாக அவர்கள் திரும்பிச் சென்றதாக செய்திகள் பரவியது. உடல்நிலை சரியில்லாததாலேயே திரும்பிச் சென்றதாக சதீஷ்குமார் விளக்கமளித்து வீடியோ வெளியிட்டிருந்தார். இந்தப் பின்னணியில் அவர் இப்போது பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.



By admin