• Fri. Aug 15th, 2025

24×7 Live News

Apdin News

சென்னை உயர் நீதிமன்றத்தில் சுதந்திர தின விழா: தலைமை நீதிபதி கொடியேற்றினார் | Independence day celebrations in Madras HC: CJ hoists national flag

Byadmin

Aug 15, 2025


சென்னை: நாட்டின் 79-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில், தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, தேசியக் கொடியை ஏற்றி வைத்து, மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள சமநீதிகண்ட சோழன் சிலை அருகில் நடந்த இந்த நிகழ்ச்சியில், உயர் நீதிமன்ற நீதிபதிகள், ஓய்வுபெற்ற நீதிபதிகள், தமிழக அமைச்சர் ரகுபதி, அரசு தலைமை வழக்கறிஞர் உள்ளிட்ட வழக்கறிஞர்கள், தமிழக டிஜிபி சங்கர் ஜிவால், சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் உள்ளிட்ட அரசு அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

பின்னர், உயர் நீதிமன்றத்தில் 25 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றிய ஊழியர்களுக்கு விருதுகள் வழங்கி, தலைமை நீதிபதி கவுரவித்தார். தொடர்ந்து, மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினரின் சாகச நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.

முன்னதாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் அலுவலகத்தில் பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார் இந்த நிகழ்ச்சியில் பார் கவுன்சில் நிர்வாகிகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.



By admin