• Mon. Nov 17th, 2025

24×7 Live News

Apdin News

சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்: தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இன்று கனமழை | Orange alert for 7 districts including Chennai

Byadmin

Nov 17, 2025


சென்னை: வங்​கக் கடலில் நில​வும் காற்​றழுத்த தாழ்வு பகுதி காரண​மாக சென்னை உள்​ளிட்ட 7 மாவட்​டங்​களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்​கப்​பட்​டுள்​ளது. மேலும், 15 மாவட்​டங்​களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்​புள்​ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரி​வித்​துள்​ளது.

இதுதொடர்​பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: இலங்கை கடலோரப் பகு​தி​களுக்கு அப்​பால், தென்​மேற்கு வங்​கக் கடல் பகு​தி​களில் காற்​றழுத்த தாழ்​வுப் பகுதி நில​வு​கிறது. இது வடமேற்கு திசை​யில் மெது​வாக நகர்ந்து செல்​லக் கூடும். இதன் காரண​மாக இன்று (நவ.17) தமிழக கடலோரப் பகு​தி​களில் பெரும்​பாலான இடங்​களி​லும், உள் தமிழகத்​தில் ஓரிரு இடங்​களி​லும், புதுச்​சேரி, காரைக்​கால் பகு​தி​களி​லும் இடி, மின்​னலுடன் கூடிய, லேசான அல்​லது மித​மான மழை பெய்​யக்கூடும்.

நாளை தென் தமிழகத்​தில் பெரும்​பாலான இடங்​களி​லும், வட தமிழகத்​தில் சில இடங்​களி​லும், 19-ம் தேதி தமிழகத்​தில் ஓரிரு இடங்​களி​லும், 20-ம் தேதி ஓரிரு இடங்​களி​லும், 21, 22-ம் தேதி​களில் ஓரிரு இடங்​களி​லும் இடி, மின்​னலுடன் கூடிய, லேசான அல்​லது மித​மான மழை பெய்​யக் கூடும் இன்று சென்​னை, செங்​கல்​பட்​டு, திரு​வள்​ளூர், காஞ்​சிபுரம், மயி​லாடு​துறை, நாகப்​பட்​டினம், திரு​வாரூர் மாவட்​டங்​களில் ஓரிரு இடங்​களி​லும், காரைக்​கால் பகு​தி​களில் கனமழை முதல் மிக கனமழை​யும், கடலூர், விழுப்​புரம், தஞ்​சாவூர், புதுக்​கோட்​டை, ராம​நாத​புரம், தூத்​துக்​குடி, திருநெல்​வேலி, கன்​னி​யாகுமரி மாவட்​டங்​களில் ஓரிரு இடங்​களி​லும், புது​வை​யிலும் கனமழை பெய்ய வாய்ப்​புள்​ளது.

நாளை கன்​னி​யாகுமரி, திருநெல்​வேலி, தூத்​துக்​குடி, ராம​நாத​புரம், சிவகங்​கை, விருதுநகர், தென்​காசி மற்​றும் தேனி மாவட்​டங்​களி​லும், வரும் 19-ம் தேதி மயி​லாடு​துறை மற்​றும் கடலூர் மாவட்​டங்​களி​லும், 20-ம் தேதி கடலூர், மயி​லாடு​துறை, விழுப்​புரம், செங்​கல்​பட்டு மாவட்​டங்​களி​லும், 21-ம் தேதி திரு​வள்​ளூர், காஞ்​சிபுரம், சென்​னை,செங்​கல்​பட்​டு, விழுப்​புரம்,கடலூர், மயி​லாடு​துறை, நாகப்​பட்​டினம், திரு​வாரூர், தஞ்​சாவூர், புதுக்​கோட்​டை, ராம​நாத​புரம்,தூத்​துக்​குடி, திருநெல்​வேலி, கன்​னி​யாகுமரி, சிவகங்​கை, அரியலூர் மாவட்​டங்​களி​ல் ஓரிரு இடங்​களில் கனமழை பெய்ய வாய்ப்​புள்​ளது.

சென்னை மற்​றும் புறநகர் பகு​தி​களில் இன்று வானம் ஓரளவு மேகமூட்​டத்​துடன் காணப்​படும். நகரின் சில பகு​தி​களில் இடி, மின்​னலுடன் கூடிய, மித​மான முதல் கன மழை​யும் பெய்​யக் கூடும். தமிழக கடலோரப் பகு​தி​கள், மன்​னார் வளை​குடா மற்​றும் குமரிக்​கடல் பகு​தி​களில் இன்று மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்​தி​லும் இடை​யிடையே 55 கி.மீ. வேகத்​தி​லும் சூறாவளிக் காற்று வீசக் கூடும். எனவே, இப்​பகு​தி​களுக்கு மீனவர்​கள் செல்ல வேண்​டாம் என்று அறி​வுறுத்​தப்​படு​கிறார்​கள்.இவ்​வாறு வானிலை ஆய்​வுமைய செய்​திக்​குறிப்​பில்​ தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.



By admin