• Sat. Apr 26th, 2025

24×7 Live News

Apdin News

சென்னை காட்டுப்பள்ளி துறைமுகத்தில் ரூ 9 கோடி வெள்ளி திருட்டு – ஜிபிஎஸ் மூலம் ஊழியர்கள் சிக்கியது எப்படி?

Byadmin

Apr 25, 2025


காட்டுப்பள்ளி துறைமுகத்தில் ரூ.9 கோடி வெள்ளி திருட்டு

பட மூலாதாரம், Avadi Police

படக்குறிப்பு, சுமார் 830 கிலோ வெள்ளிக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது

காட்டுப்பள்ளி அதானி துறைமுகத்தில் ரூ.9 கோடி மதிப்புள்ள வெள்ளிக் கட்டிகள் மாயமான வழக்கில் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக, ஆவடி காவல் ஆணையர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

கைதான நபர்களிடம் இருந்து ரூ.8 கோடி மதிப்புள்ள சுமார் 830 கிலோ வெள்ளிக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணை நடைபெற்று வருவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

லண்டனில் இருந்து வந்த வெள்ளிக்கட்டிகள் கடத்தப்பட்டது எப்படி? கைதான நபர்களின் பின்னணி என்ன?

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட காட்டூர் காவல் நிலையத்தில் தாசரி ஸ்ரீஹரிராவ் என்பவர், கடந்த ஏப்ரல் 5 ஆம் தேதி புகார் மனு ஒன்றை அளித்திருந்தார்.

By admin