• Thu. Oct 17th, 2024

24×7 Live News

Apdin News

சென்னை: காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் எப்போது புயலாக மாறும்? எளிய விளக்கம்

Byadmin

Oct 17, 2024


புயல், வானிலை, தமிழ்நாடு, சென்னை, மழை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வெப்பக் காற்று தொடர்ந்து கிடைக்காவிட்டால் புயல் வலுவிழந்துவிடும்

புயல் மீண்டும் பேசுபொருளாகியிருக்கிறது. அதைப்பற்றித் தெரிந்துகொள்வோம்.

கடலில் உள்ள வெப்பக் காற்று தான் புயலாக மாறுகிறது என்பது புயலுக்கான ஒற்றை வரி விளக்கமாகும்.

கடலில் உள்ள வெப்பமான ஈரப்பதம் கொண்ட காற்று கடல் பரப்புக்கு மேல் எழும்பும். அப்படி வெப்பக் காற்று மேல் எழும்பும் போது, அதன் கீழே குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும். சுற்றியுள்ள அதிக காற்றழுத்தம், குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதிக்குள் நகரும். இந்தப் பகுதிக்குள் வந்த பிறகு, இந்தக் காற்றும் வெப்பமடைந்து மேல் எழும்பும்.

இப்படித் தொடர்ந்து வெப்பக்காற்று மேலெழும்பும் போது அது மேகங்களாக மாறும். மேகங்களும் காற்றும் சுழலத் தொடங்கும். கடலிலிருந்து மேல் எழும்பும் வெப்பக் காற்று அந்தச் சுழற்சிக்குத் தொடர் உந்துதலாக இருக்கும். இதுவே புயல் எனப்படுகிறது.

By admin