• Fri. Jul 3rd, 2026

24×7 Live News

Apdin News

சென்னை சென்ட்ரல்-போத்தனூர் இடையே சிறப்பு ரெயில்: தெற்கு ரெயில்வே அறிவிப்பு

Byadmin

Jul 3, 2026


தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

போத்தனூரில் இருந்து இன்று (3-ந்தேதி) முதல் வருகிற ஆகஸ்டு 2-ந்தேதி வரையில் (வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை) காலை 7.40 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்ட்ரல் வரும் சிறப்பு ரெயில் (வண்டி எண்.06028) அதேநாள் மாலை 4.45 மணிக்கு சென்டிரல் வந்தடையும்.

மறுமார்க்கமாக, சென்னை சென்ட்ரலில் இருந்து மேற்கண்ட தேதிகளில் மாலை 5.45 மணிக்கு புறப்பட்டு போத்தனூர் வரும் சிறப்பு ரெயில் (06027), மறுநாள் அதிகாலை 3 மணிக்கு போத்தனூர் வந்தடையும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

By admin