• Sun. Jan 12th, 2025

24×7 Live News

Apdin News

சென்னை: செயற்கை கடல் அலைகளை உருவாக்கி மெட்ராஸ் ஐஐடி ஆய்வு – சுனாமி, புயல் பாதிப்பை தடுக்க எவ்வாறு உதவும்?

Byadmin

Jan 12, 2025


சென்னை ஐஐடி, செயற்கை கடல் அலை
படக்குறிப்பு, செயற்கை அலைகளை உருவாக்குவதற்காக, 152 கருவிகள் (Wave makers) இந்தக் கூடத்தில் பொருத்தப்பட்டுள்ளன

2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியை நம்மால் மறக்கவே முடியாது. சுனாமி, புயல் காலங்களில் ஏற்படும் கடல் சீற்றம் ஆகியவை கடற்கரையோரம் வாழும் மக்களின் வாழ்விலும், இந்திய துறைமுகங்கள் மீதும் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து ஆய்வு செய்ய ஒரு புதிய கட்டமைப்பை உருவாக்கியுள்ளது ஐஐடி மெட்ராஸ்.

செங்கல்பட்டு மாவட்டத்தின் தையூர் எனும் கிராமத்தில் உள்ள ஐஐடி மெட்ராஸின் டிஸ்கவரி வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள இந்த ஆழமற்ற கடல்அலைப் படுகை ஆராய்ச்சிக் கூடம் (Shallow Wave Basin Research Facility) ஆசியாவிலேயே மிகப்பெரியது என ஆய்வுக் குழுவினர் தெரிவிக்கின்றனர்.

இங்கு பல்வேறு விதமான கடல் அலைகள் செயற்கையாக உருவாக்கப்பட்டு, சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

By admin