• Thu. Dec 26th, 2024

24×7 Live News

Apdin News

சென்னை: தமிழ்நாடு அரசின் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பின் நிலை என்ன? பிபிசி கள ஆய்வு

Byadmin

Dec 25, 2024


சென்னை, பட்டினப்பாக்கம் குடியிருப்பு
படக்குறிப்பு, சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியக் குடியிருப்பு

“வேலைக்குப் போய் விட்டு அன்றைய தினம் குலாப் சீக்கிரமாக வந்துவிட்டான். மதிய தொழுகையை முடித்துவிட்டு தெரு வழியாக நடந்து வந்து கொண்டிருந்தான். அப்போது மூன்றாவது மாடியில் ஜன்னல் மேல் இருந்த சன்ஷேடு (Sun Shade) குலாப் தலையில விழுந்துவிட்டது” என்கிறார் சையது குலாபின் உறவினர் யாகூப் பாட்ஷா.

ரத்த வெள்ளத்தில் கிடந்த குலாபை சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை. கடந்த டிசம்பர் 4 ஆம் தேதி இந்த நிகழ்வு நடைபெற்றது.

இதன் தொடர்ச்சியாக, கடந்த ஞாயிறுக்கிழமை அன்று (டிசம்பர் 22) மோகன் என்பவர் மூன்றாவது மாடியில் உள்ள தனது வீட்டு பால்கனியில் கைப்பிடிச் சுவரைப் பிடித்த போது அது கீழே விழ, அவரும் கீழே விழுந்துவிட்டார். மோகன் தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இவ்விரு சம்பவங்களும் சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியக் குடியிருப்புகளில் நடந்தன. இங்குள்ள வீடுகள் பலவும் சேதமடைந்துவிட்டதால், அச்சத்துடன் வாழ்ந்து வருவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

By admin