• Tue. Aug 12th, 2025

24×7 Live News

Apdin News

சென்னை தூய்மைப் பணியாளர் போராட்டத்தில் என்ன நடக்கிறது? 7 கேள்வி-பதில்கள்

Byadmin

Aug 12, 2025


சென்னை தூய்மை பணியாளர்கள் போராட்டம், ஸ்டாலின், பிரியா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சென்னை தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் பங்கேற்றுள்ள பெண்கள்

சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் மாநகராட்சி அலுவலகம் அமைந்துள்ள ரிப்பன் மாளிகையில் நடத்தி வரும் போராட்டம் இன்றுடன் (ஆக. 12) 12-வது நாளை எட்டியுள்ளது. தூய்மைப் பணியை தனியாரிடம் ஒப்படைக்கக் கூடாது என்பது அவர்களின் கோரிக்கை.

பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்ட பிறகும் இன்னும் தீர்வு எட்டப்படவில்லை. இந்த விவகாரத்தில் என்ன நடக்கிறது?

தூய்மை பணியாளர்கள் போராட்டம் ஏன்?

சென்னை மாநகராட்சியில் தூய்மை பணிகள் மொத்தம் 15 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. கடந்த அதிமுக ஆட்சியில், 2020ம் ஆண்டில் 10 மண்டலங்களின் தூய்மைப் பணி தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டது. மீதமுள்ள 5 மண்டலங்களில் ராயப்பேட்டை மற்றும் திரு.வி.க. நகர் ஆகியவற்றை தனியார் வசம் ஒப்படைக்கும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தே தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்துகின்றனர்.

ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் சென்னை மாநகராட்சி அலுவலகம் அமைந்துள்ள ரிப்பன் மாளிகை முன்பு இரவு, பகலாக போராடி வருகின்றனர். இரு மண்டலங்களை சேர்ந்த சுமார் 2,000 தூய்மை பணியாளர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சுமார் ரூ.6,000 என இருந்த தங்களின் சம்பளம், கடந்த 10-15 ஆண்டுகளில் படிப்படியாக ரூ. 23,000 என உயர்ந்துள்ளதாகவும் தனியார்வசம் சென்றால் தங்கள் சம்பளம் ரூ. 16 ஆயிரமாக குறைக்கப்படலாம் என்றும் அவர்கள் அஞ்சுகின்றனர்.

By admin