• Sun. Aug 24th, 2025

24×7 Live News

Apdin News

சென்னை, புறநகர் கனமழை: சாலைகளில் மழைநீர் தேக்கம்; வேரோடு சாய்ந்த 17 மரங்கள்

Byadmin

Aug 24, 2025


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று அதிகாலை கனமழை கொட்டித்தீர்த்தது. தமிழகப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. குறிப்பாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம் காலை முதலே கடும் வெயில் வாட்டி வதைத்தது. புழுக்கமும் அதிகமாக இருந்ததால் பொது மக்கள் அவதிப் பட்டனர். திடீரென மாலை முதல் சென்னை, புறநகர் பகுதிகளில் விட்டுவிட்டு மழை பெய்தது. அதன் தொடர்ச்சியாக நேற்று அதிகாலையில் இருந்து இடி, மின்னலுடன் கூடிய கனமழை கொட்டித் தீர்த்தது.

By admin