• Wed. Mar 26th, 2025

24×7 Live News

Apdin News

சென்னை மாநகராட்சியின் கழிவறை ஒப்பந்த ஊழல் வெளிச்சத்துக்கு வரும்: தமிழக பாஜக குற்றச்சாட்டு | BJP allegation for chennai corporation toilet contract scam

Byadmin

Mar 24, 2025


சென்னை: பாஜக மாநில செய்​தித் தொடர்​பாளர் ஏ.என்​.எஸ்​.பிர​சாத் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: பிரதமர் மோடி, அண்​ணா​மலை படத்தை கழி​வறை​யில் ஒட்டி திமுக​வினர் செய்​யும் அரசி​யல் கீழ்த்​தர​மானது. தமிழகத்​தில் நடந்த ஆயிரம் கோடி ரூபாய் டாஸ்​மாக் ஊழலை அமலாக்​கத்​துறை அம்​பலப்​படுத்​தி​யதை தொடர்ந்து தமிழகம் முழுக்க ஜனநாயக வழி​யில் பாஜக​வினர் நடத்​திய போராட்​டத்தை திமுக அரசு காவல்​துறையை கொண்​டு, சட்​டத்​துக்கு புறம்​பாக பல்​வேறு அராஜக வழி​யில், அடக்க முயற்​சித்து தோற்​று​விட்​டது.

டாஸ்​மாக் ஊழலை தட்டி கேட்ட பாஜக​வினரை, கொடுமைப்​படுத்​தும் காவல்​துறையை கண்​டித்​து, காவல்​துறை​யின் பொறுப்பு அமைச்​ச​ராக உள்ள தமிழக முதல்​வர் ஸ்டா​லினை கண்​டித்து தமிழகம் முழுக்க டாஸ்​மாக் கடைகளின் வாசலில் முதல்​வரின் படத்தை ஒட்​டும் போராட்​டத்தை மகளிர் அணி​யினர் நடத்​தி​னார்​கள்.

காவல்​துறை​யின் கடும் கெடு​பிடிகளி​லும் மனம் தளராமல் ஊழலை எதிர்த்து பாஜக தொடர்ந்து போராடி வரு​கிறது. தமிழகத்​துக்கு பல லட்​சம் கோடி திட்​டங்​களை அளித்து தமிழகத்​தின் வளர்ச்​சியை மேம்​படுத்​தும் பிரதமர் மோடி, தமிழகத்​தின் வளர்ச்சி திட்டங்களுக்கு குரல் கொடுத்​து, மக்​களின் உரிமை​களுக்​காக பாடு​பட்டு அரசி​யல் சேவை செய்​யும் அண்​ணா​மலை புகைப்​படத்தை ஆண்​கள் கழி​வறை​யில் ஒட்டி கேவலப்​படுத்​து​வது தான் பேரறிஞர் அண்ணா உங்​களுக்கு கற்​றுக் கொடுத்த கடமை, கண்​ணி​யம், கட்​டுப்​பாடு அரசி​ய​லா? வெகு விரை​வில் சென்னை மாநக​ராட்சி கழி​வறை ஒப்​பந்த ஊழல் வெளிச்​சத்​துக்கு வரவுள்​ளது.



By admin