• Wed. Nov 6th, 2024

24×7 Live News

Apdin News

சென்னை: ரூ.744 கோடி அடையாறு மறுசீரமைப்புத் திட்டம் என்ன ஆனது? பிபிசி கள ஆய்வு

Byadmin

Nov 3, 2024


சென்னை அடையாறு மறுசீரமைப்புத் திட்டம், ரூ.744 கோடி என்ன ஆனது?
படக்குறிப்பு, அடையாறு நதியின் மறுசீரமைப்புக்காக மேற்கொள்ளப்பட்ட பணிகளால் நதி தூய்மையடையவில்லை என்கிறார், மீனவர் பாளையம்

  • எழுதியவர், க. சுபகுணம்
  • பதவி, பிபிசி தமிழ்

அன்று காலை 6:45 மணி இருக்கும். சென்னையின் ஸ்ரீநிவாசபுரம் அருகே, அடையாற்றின் கரையோரத்தில் உடைந்த பாலம் அருகே நின்றுகொண்டிருந்தேன். அடையாற்றின் தன்மை குறித்துப் பேசிக்கொண்டே உடன் வந்த மீனவர் பாளையம், சில மீன்கள் செத்து மிதப்பதைச் சுட்டிக் காட்டினார்.

அடையாறு நதியின் மறுசீரமைப்புக்காக மேற்கொள்ளப்பட்ட பணிகளால் நதி தூய்மையடையவில்லை என்றும் நதியில் கழிவுநீர் தொடர்ந்து கலப்பதாகவும், முகத்துவாரம் அவல நிலையில் இருப்பதாகவும் அங்கிருந்த மீனவர்கள் கூறினர்.

இதுகுறித்து தமிழ்நாடு நகர்ப்புறக் கட்டுமான நிதி சேவைகள் துறையின் தலைவரும் சென்னை நதிகள் மீட்டுருவாக்க அறக்கட்டளை கட்டுப்பாட்டாளருமான விஜயகுமார் பிபிசி தமிழிடம் பேசியபோது, அடையாற்றை மறுசீரமைக்க இதுவரை பலகட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாகவும், தற்போது அடுத்தகட்டப் பணிகள் திட்டமிடப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

அடையாறு நதியை மறுசீரமைக்க தமிழ்நாடு அரசு இதுவரை என்னென்ன முயற்சிகளை எடுத்துள்ளது? அதற்காக எவ்வளவு நிதி செலவழிக்கப்பட்டது? அதற்குப் பலன் கிடைத்துள்ளதா?

By admin