• Sun. May 4th, 2025

24×7 Live News

Apdin News

சென்னை: வாட்ஸ்ஆப் மூலம் வரி, பிறப்பு இறப்பு சான்றிதழ்களைப் பெற முடியும்

Byadmin

May 4, 2025


சென்னை மாநகராட்சி சேவைகளை இனி வாட்ஸ் ஆப் மூலம் பெறலாம் - ஆணையர் அறிவிப்பு

பட மூலாதாரம், Getty Images

இன்றைய (04/05/2025) நாளிதழ்கள் மற்றும் இணையதளங்களில் வெளிவந்துள்ள முக்கியச் செய்திகள் இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.

பெருநகர சென்னை மாநகராட்சி, வாட்ஸ்ஆப் மூலம் பொதுமக்களுக்கான சேவைகளை மேம்படுத்த திட்டமிட்டுள்ளது என்று தி டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் அதில் “மக்களுக்கு விரைவான மற்றும் எளிமையான உதவிகளை வழங்குவதற்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த புதிய திட்டம், மாநகராட்சி தங்கள் புகார்களை முன்பை விட சிறப்பாகவும் விரைவாகவும் கையாள்வதற்கு வழிவகுக்கும். இந்த வாட்ஸ்ஆப் வசதி மூலம், மக்கள் வரி செலுத்தலாம் மற்றும் ஆவணங்களை பதிவிறக்கம் செய்யலாம்”, என்றும் கூறப்பட்டுள்ளது.

“நாங்கள் ஒரு பொதுவான சென்னை மாநகராட்சி வாட்ஸ்ஆப் எண்ணை வழங்குவோம், இது பொதுமக்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ள உதவுகிறது. இந்த சாட்பாட் செயற்கை நுண்ணறிவு மூலம் இயக்கப்படும்”, என்று பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் கூறினார் என்று தி டைம்ஸ் ஆஃப் இந்தியா அதன் செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

By admin