• Thu. Oct 17th, 2024

24×7 Live News

Apdin News

சென்னை வானிலை: மழை முன்னறிவிப்பில் பயன்படுத்தும் அறிவியல் சொற்களின் விளக்கம் என்ன?

Byadmin

Oct 17, 2024


வானிலை முன்னறிவிப்பு: மழை, புயல் தொடர்பாக அவசியம் அறிய வேண்டிய முக்கிய கலைச்சொற்கள்

பட மூலாதாரம், Getty Images

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் அதிகனமழை எச்சரிக்கை இந்த வாரத் தொடக்கத்தில் இருந்தே வானிலை ஆய்வு மையத்தால் வழங்கப்பட்டு வந்தது.

ஒவ்வொரு முறையும் மழை குறித்த எச்சரிக்கைகளை வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கும்போது, அதற்காக, மழைப்பொழிவு, புயல் எச்சரிக்கை, ரெட், ஆரஞ்சு அலர்ட், பருவமழை எனப் பல அறிவியல் சொற்களைப் பயன்படுத்துவார்கள்.

இத்தகைய சொற்களின் பொருள் என்ன, அவை குறிக்கும் வானிலை முன்னறிவிப்புகள் என்ன என்ற சந்தேகம் நம்மில் பலருக்கும் இருக்கும். இந்தக் கட்டுரை, இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள கலைச் சொற்களின் தொகுப்பு மற்றும் அதன் இணையதளத்தில் அளிக்கப்பட்டுள்ள விளக்கங்களின் அடிப்படையில், அந்தச் சந்தேகங்களைத் தெளிவுபடுத்த முயல்கிறது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

பருவமழை (Monsoon Rain) என்றால் என்ன?

காற்றின் திசையில் ஏற்படும் பருவகால மாற்றத்தின் விளைவாக நிகழும் மழைப்பொழிவே பருவமழை எனப்படுகிறது. பருவ மழைக்காலம், வருடாந்திர மழைப்பொழிவில் பெரும் பங்கை வகிக்கிறது.

By admin