• Fri. Feb 7th, 2025

24×7 Live News

Apdin News

சென்னை: 216 கிராம் தாலியை திருப்பிக் கொடுங்கள் – சுங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட உயர் நீதிமன்றம்

Byadmin

Feb 7, 2025


இன்றைய முக்கிய செய்திகள், தலைப்பு செய்திகள், செய்திகள்

பட மூலாதாரம், Getty Images

இன்றைய (07/02/2025) நாளிதழ்களில் வெளிவந்துள்ள முக்கிய செய்திகள் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.

சென்னை உயர் நீதிமன்றம், இலங்கையைச் சேர்ந்த பெண்ணிடம் கைப்பற்றிய 216 கிராம் எடை கொண்ட தாலியை உடனடியாக திருப்பி அளிக்கும்படி சுங்க அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆங்கில நாளிதழின் செய்தி தெரிவிக்கிறது.

“நம்முடைய பழக்கவழக்கங்களின்படி, திருமணமான பெண்கள் அந்த எடையில் தங்கத்தில் தாலி போட்டுக்கொள்வது நடைமுறையில் இருக்கும் ஒன்று. அதிகாரிகள் சோதனை செய்யும்போது அவர்கள் அனைத்து மதத்தின் பழக்கவழக்கங்களையும் மதிக்க வேண்டும்,” என்று நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி தெரிவித்ததாக அந்த செய்தி குறிப்பிடுகிறது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

சுங்க அதிகாரிகளின் இந்த செயல் நியாயமற்றது என நீதிபதி குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த நடவடிக்கையில் ஈடுபட்ட அதிகாரி மீது தகுந்த துறைசார் நடவடிக்கை மேற்கொள்ளும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

By admin