• Thu. Sep 25th, 2025

24×7 Live News

Apdin News

சென்னை | 8 இடங்களில் மின் திருட்டு: ரூ.9.40 லட்சம் வசூல் | Electricity theft at 8 locations in chennai

Byadmin

Sep 25, 2025


சென்னை: சென்னை கோட்​டத்​தில் 8 மின் திருட்​டு​கள் கண்​டு​பிடிக்​கப்​பட்டு இழப்​பீட்​டுத் தொகை ரூ.9.40 லட்​சம் வசூலிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மின்​வாரி​யம் வெளி​யிட்ட அறிக்​கை: தமிழ்​நாடு மின்​பகிர்​மானக் கழகத்​தின் சென்னை அமலாக்க கோட்​டத்​துக்கு உட்​பட்ட சென்னை வடக்​கு, சென்னை மையம், சென்னை தெற்​கு, சென்னை மேற்​கு, செங்​கல்​பட்​டு, காஞ்​சிபுரம் அமலாக்க அதி​காரி​கள் சோழிங்​கநல்​லூர் கோட்​டம் சென்னை தெற்​கு-2 மின்​பகிர்​மான வட்​டத்​துக்கு உட்​பட்ட பகு​தி​யில் கடந்த 9-ம் தேதி ஆய்வு மேற்​கொண்​டனர்.

அப்​போது அந்த பகு​தி​யில் 8 மின் திருட்​டு​கள் கண்​டு​பிடிக்​கப்​பட்​டு, மின் நுகர்​வோருக்கு ரூ.9.01 லட்​சம் இழப்​பீட்டு தொகை விதிக்​கப்​பட்​டது. அவர்​கள் குற்​றத்தை ஒப்​புக்​கொண்டு குற்​ற​வியல் நடவடிக்​கையை தவிர்க்க முன்​வந்து சமரசத் தொகை ரூ.39 ஆயிரம் செலுத்​தி​ய​தால், காவல் நிலை​யத்​தில் புகார் ஏதும் பதிவு செய்​யப்​பட​வில்​லை.

மின் திருட்டு சம்​பந்​த​மான புகார்​கள், தகவல்​களை சென்னை அமலாக்க செயற்​பொறி​யாளரிடம் 94458 57591 என்ற எண்​ணில் தெரிவிக்​கலாம்.



By admin