• Fri. Nov 1st, 2024

24×7 Live News

Apdin News

சென்னை: 85% சதுப்பு நிலங்கள் அழிந்துவிட்டதாக கூறும் உலக காட்டுயிர் நிதியம் – விளைவுகள் என்ன?

Byadmin

Nov 1, 2024


சென்னையில் சதுப்பு நிலங்கள் 85% குறைந்துவிட்டதாக, உலக வனவிலங்கு நிதியம் குறிப்பிடுகிறது

பட மூலாதாரம், TNSWA

படக்குறிப்பு, சென்னையில் சதுப்பு நிலங்கள் 85% குறைந்துவிட்டதாக, உலக காட்டுயிர் நிதியம் குறிப்பிடுகிறது.

உலகளாவிய அமைப்புகள் அவ்வப்போது, காலநிலை மாற்றம், சூழலியல் பிரச்னைகளால் ஏற்படும் அபாயங்கள் குறித்து எச்சரிக்கும் அறிக்கைகளை வெளியிடும்.

சமீபத்தில் உலக காட்டுயிர் நிதியம் வெளியிட்டுள்ள அத்தகைய ஓர் அறிக்கையான ‘தி லிவிங் பிளானட் 2024’ (The Living Planet 2024), தமிழ்நாட்டின் சென்னையில் ஏற்பட்டுள்ள சூழலியல் பாதிப்புகள் குறித்த முக்கியமான தகவல்களை வெளியிட்டுள்ளது.

இந்த ஆய்வறிக்கை, அமேசான் காடுகள் இழப்பால் உலக வானிலை எப்படி பாதிக்கப்படுகிறது, கடல் நீரோட்டத்தில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக, ஐரோப்பா, வட அமெரிக்காவில் வானிலையின் போக்கு எப்படி மாறுகிறது என்பது குறித்து, உலகளவில் நேரிட்டுள்ள பல சூழலியல் பாதிப்புகள் குறித்து விரிவாகப் பேசுகிறது.

குறிப்பாக சென்னை பெருநகரம், வேகமெடுக்கும் நகரமயமாதல் காரணமாக, அதன் சதுப்புநிலப் பரப்பில் 85% பகுதியை இழந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

By admin