• Wed. Nov 26th, 2025

24×7 Live News

Apdin News

சென்யார்: புயலாக வலுப்பெற்ற ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் – தமிழ்நாட்டில் எங்கெல்லாம் மழை எச்சரிக்கை?

Byadmin

Nov 26, 2025


வங்கக்கடலில் புயல் உருவாகிறதா? தமிழ்நாட்டில் எங்கெல்லாம் மழை எச்சரிக்கை?

பட மூலாதாரம், IMD

இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவானது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலுக்கு ‘சென்யார்’ என பெயரிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் இன்று காலை 9.13 மணிக்கு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், மலாக்கா நீரிணையில் ஏற்பட்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 10 கிமீ வேகத்தில் மேற்கு நோக்கி நகர்ந்து, ‘சென்யார்’ புயலாக தீவிரமடைந்துள்ளது என தெரிவித்துள்ளது.

“நவம்பர் 26, 2025 காலை 05:30 மணி நிலவரப்படி, ‘சென்யார்’ புயல் நான்கோவ்ரிக்கு (நிக்கோபார் தீவுகள்) கிழக்கு – தென்கிழக்கே 600 கிமீ மற்றும் கார் நிக்கோபருக்கு (நிக்கோபார் தீவுகள்) தென்கிழக்கே 740 கிமீ தொலைவில் மையம் கொண்டுள்ளது.”

மேலும், “அடுத்த 24 மணி நேரத்திற்கு சென்யார் புயலின் தீவிரம் குறையாது, பின்னர் படிப்படியாக பலவீனமடைய வாய்ப்புள்ளது. அது இன்று (நவம்பர் 26) காலையில் மேற்கு நோக்கி நகர்ந்து இந்தோனீசியா கடற்கரையைக் கடக்கும். அதன் பிறகு, அது மேற்கு – தென்மேற்கு நோக்கி நகர்ந்து, அடுத்த 48 மணி நேரத்தில் கிழக்கு நோக்கி திரும்பும்” எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

வானிலை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப் படம்

மற்றொரு சுழற்சி

இது தவிர, ”நேற்று தென்மேற்கு வங்ககடல் பகுதியை ஒட்டிய தெற்கு இலங்கை பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி, இன்று அதிகாலை 5.30 மணி நிலவரப்படி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மாறியுள்ளது”. என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது

By admin