• Wed. Nov 26th, 2025

24×7 Live News

Apdin News

சென்யார் புயல்: புயல்களுக்கு பெயர் வைக்கப்படுவது எப்படி? முடிவு செய்வது யார்?

Byadmin

Nov 26, 2025


புயல், இந்தியப் பெருங்கடல், வங்கக்கடல், புயல் பெயர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சர்வதேச வானிலை ஆய்வு அமைப்பும் வேறு சில வானிலை அமைப்புகளும் இணைந்து வகுத்த வழிமுறைகளின்படி இந்தப் பெயர்கள் வைக்கப்படுகின்றன. (கோப்புப்படம்)

(கடந்த 2020ஆம் ஆண்டு வெளியான இந்தக் கட்டுரை தற்போது மறுபகிர்வு செய்யப்படுகிறது)

மலேசியா மற்றும் இந்தோனீசியா அருகே உருவான ‘சென்யார்’ புயல் இன்று காலை இந்தோனீசியாவில் கரையைக் கடந்தது. அடுத்த 24 மணிநேரத்தில் இந்தப் புயல் வலுவிழந்து மேற்கு நோக்கி நகரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதோடு, வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாகத் தீவிரமடையும் என வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது மேலும் தீவிரமானால் புயலாகவும் மாறலாம் என வானிலை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேபோலக் கடந்த அக்டோபர் மாதம் வங்கக் கடலில் உருவான மோன்தா புயல் ஆந்திராவில் கரையைக் கடந்தது. ஒவ்வொரு புயல் உருவாகின்ற போதும் அதன் பெயர் பற்றிய விவாதங்கள் சமூக ஊடகங்களில் எழுப்பப்படுகின்றன. ஆனால் இதன் பின்னுள்ள வழிமுறை மிகவும் சுவாரஸ்யமானது.

புயல்களுக்கு இப்படிப் பெயரிடும் வழக்கம் 2004ஆம் ஆண்டில் தொடங்கியது. பல்வேறு நாடுகள் இணைந்து தயாரிக்கும் ஒரு பொதுப் பட்டியலின் அடிப்படையில் இந்தப் பெயர்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

By admin