0
தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திர நடிகரான விஜய் அண்டனி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ சக்தி திருமகன்’ எனும் திரைப்படம் செப்டம்பர் 19 ஆம் திகதியன்று வெளியாகும் என அப்படத்தின் நாயகனும் , தயாரிப்பாளருமான விஜய் அண்டனி உறுதி செய்துள்ளார்.
இயக்குநர் அருண் பிரபு இயக்கத்தில் உருவாகி உள்ள ‘ சக்தி திருமகன்’ எனும் திரைப்படத்தில் விஜய் அண்டனி, வாகை சந்திரசேகர், சுனில் கிருபளானி, செல் முருகன், திரிப்தி ரவீந்திரா, கிரண், ரியா, மாஸ்டர் கேசவ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
ஷெல்லி காலிஸ்ட் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு விஜய் அண்டனி இசையமைத்திருக்கிறார். அரசியல் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை விஜய் அண்டனி ஃபிலிம் கொர்ப்பரேஷன் நிறுவனம் தயாரித்திருக்கிறது.
இந்த திரைப்படத்தின் டீசர் வெளியாகி மூன்று மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனைப்படைத்ததுடன்… படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பையும் எகிற வைத்திருந்தது.
இந்நிலையில் இந்த திரைப்படம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஐந்தாம் திகதியன்று உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால் பட மாளிகையின் எண்ணிக்கையில் சமரசம் ஏற்படுத்திக் கொள்ள விரும்பாததால் இந்த திரைப்படம் தற்போது செப்டம்பர் மாதம் 19 ஆம் திகதியன்று தமிழ்- தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ஒரே தருணத்தில் அதிக பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.