• Tue. Sep 9th, 2025

24×7 Live News

Apdin News

செப்டெம்பர் மாதத்தின் முதல் 7 நாட்களில் 37,495 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை!

Byadmin

Sep 9, 2025


2025 ஆம் ஆண்டின் செப்டெம்பர் மாதத்தின் முதல் 7 நாட்களில் 37,495 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

செப்டெம்பர் மாதத்தின் முதல் 7 நாட்களில் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 10,171 ஆகும்.

அத்துடன், ரஷ்யா, ஐக்கிய இராச்சியம், ஜெர்மனி, பிரான்ஸ், சீனா ஆகிய நாடுகளிலிருந்தும் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.

அதன்படி, 2025 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து செப்டெம்பர் மாதம் 07 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 16 இலட்சத்து 04 ஆயிரத்து 018 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.

By admin