• Wed. Sep 3rd, 2025

24×7 Live News

Apdin News

செப்.6 வரை வெப்பநிலை உயர்வதற்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல் | Temperatures likely to rise until September 6 imd

Byadmin

Sep 3, 2025


சென்னை: தமிழகத்​தில் செப்​.6-ம் தேதி வரை வெப்​பநிலை உயர வாய்ப்பு உள்​ள​தாக அறிவிக்​கப்​பட்​டுள்​ளது.

இதுதொடர்​பாக வானிலை ஆய்வு மையம் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: வடமேற்கு வங்​கக்​கடல் பகு​தி​களில் ஒரு காற்​றழுத்த தாழ்வு பகுதி நேற்று உரு​வானது. இது மேலும் வலுவடைந்​து, மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்​து, ஒடிசா பகு​தி​களை நாளை கடந்து செல்​லக்​கூடும்.

இதற்​கிடையே, மேற்கு திசை காற்​றின் வேக மாறு​பாடு காரண​மாக வடதமிழகத்​தின் ஒருசில இடங்​களி​லும், தென்​தமிழகத்​தின் ஓரிரு இடங்​களி​லும், புதுச்​சேரி மற்​றும் காரைக்​கால் பகு​தி​களி​லும் இன்று இடி, மின்​னலுடன் லேசானது முதல் மித​மான மழைபெய்​யக்​கூடும். பலத்த தரைக்​காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்​தில் வீசக்​கூடும்.தமிழகத்​தின் ஓரிரு இடங்​களி​லும், புதுச்​சேரி மற்​றும் காரைக்​கால் பகு​தி​களி​லும் செப்​.6-ம் தேதி வரை அதி​கபட்ச வெப்​பநிலை 35.6 முதல் 37.4 டிகிரி பாரன்​ஹீட்​டாக இருக்​கக்​கூடும்.

சென்னை மற்​றும் புறநகரில் இன்று ஒருசில பகு​தி​களில் இடி மின்​னலுடன் மித​மான மழை பெய்ய வாய்ப்​புள்​ளது. இவ்​வாறு அதில்​ கூறப்​பட்டு​ள்​ளது.



By admin